under review

ஆத்திசூடி நூல்கள்

From Tamil Wiki
Revision as of 19:28, 25 October 2024 by Madhusaml (talk | contribs)
ஆத்திசூடி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ஆத்திசூடி (பெயர் பட்டியல்)

ஆத்திசூடி என்ற பெயர் கொண்ட நூல்களின் பட்டியல். ஔவையார் இயற்றிய ஆத்திசூடியைத் தொடர்ந்து பாரதியார் புதிய ஆத்திசூடி படைத்தார். சுத்தானந்த பாரதி ஆத்திசூடி நூல் ஒன்றை எழுதினார். பாரதிதாசனும் ஆத்திசூடி நூல்களை எழுதினார். தொடர்ந்து வாணிதாசன், வ. சுப. மாணிக்கம், தமிழண்ணல் எனப் பலர் ஆத்திசூடி நூல்களை எழுதினர்.

ஆத்திசூடி நூல்கள் பட்டியல்

ஆசிரியர் நூல்கள்
ஔவையார் ஆத்திசூடி
ஔவையார் சிவதோத்திர ஆத்திசூடி
பாரதியார் புதிய ஆத்திசூடி
பாரதிதாசன் இளையார் ஆத்திசூடி
பாரதிதாசன் பாரதிதாசன் ஆத்திசூடி
சுத்தானந்த பாரதியார் ஆத்திசூடி
வாணிதாசன் புதிய ஆத்திசூடி
ந. சஞ்சீவி பொதுவுடைமை ஞான அறிவுசூடி ஆத்திசூடி
மு. வரதராசன் ஆத்திசூடி
வ. சுப. மாணிக்கம் தமிழ் சூடி
தமிழண்ணல் ஆய்வுசூடி
ச. மெய்யப்பன் அறிவியல் சூடி
தமிழ் பெரியசாமி புகழ்சூடி
சேயோன் திருவள்ளுவர் ஆத்திசூடி
ரெ. முத்துகணேசன் முத்துசூடி
மு. சாயபு மரைக்காயர் அறிவியல் ஆத்திசூடி
நாரா. நாச்சியப்பன் நெறிசூடி
சோம. இளவரசு நீதிசூடி
இரா. காமராசு உலக மய ஆத்திசூடி
நெல்லை சு. முத்து அறிவியல் ஆத்திசூடி
தமிழ்ப்பரிதி தமிழ்ப்பரிதி ஆத்திசூடி
என்.வி. சுப்பராமன் மழலையர் ஆத்திசூடி
தபூசங்கர் காதல் ஆத்திச்சூடி
டி. ரோஸ்லின் சுரேஷ் நவீன ஆத்திச்சூடி
கவிவளவன் நவீன ஆத்திசூடி
இராம பாரதி ஆத்திசூடி வெண்பா
ஆறுமுகப் பாவலர் ஆத்திசூடிப் புராணம்
ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை ஆத்திசூடி சிந்து


உசாத்துணை


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 12-Jul-2024, 11:20:55 IST