Disambiguation

ஆத்திசூடி (பெயர் பட்டியல்)

From Tamil Wiki
Revision as of 19:28, 25 October 2024 by Madhusaml (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ஆத்திசூடி என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • ஆத்திசூடி: ஆத்திசூடி (பொ. யு. 12-ம் நூற்றாண்டு) நீதி இலக்கிய நூல்களுள் ஒன்று. ஔவையாரால் இயற்றப்பட்டது
  • ஆத்திசூடி நூல்கள்: ஆத்திசூடி என்ற பெயர் கொண்ட நூல்களின் பட்டியல். ஔவையார் இயற்றிய ஆத்திசூடியைத் தொடர்ந்து பாரதியார் புதிய ஆத்திசூடி படைத்தார். சுத்தானந்த பாரதி ஆத்திசூடி நூல் ஒன்றை எழுதினார்
  • அறிவியல் ஆத்திசூடி: அறிவியல் ஆத்திசூடி (2014), அறிவியல் கருத்துக்களைக் கூறும் ஆத்திசூடி நூல். இந்நூலின் ஒரு பகுதி, தமிழக அரசின் ஆறாம் வகுப்பு சமச்சீர் கல்வி தமிழ்ப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றது
  • ஆத்திசூடி சிந்து: ஆத்திசூடி சிந்து (1915), ஒரு நீதி நூல். ஔவையார் (கவிஞர்கள்) இயற்றிய ஆத்திசூடியைத் தொடர்ந்து பலரும் பல ஆத்திசூடி நூல்களை, ஆத்திசூடி வெண்பா, புராணம் எனப் பல நூல்களை இயற்றினர்
  • ஆத்திசூடி வெண்பா: ஆத்திசூடி வெண்பா (பொ. யு. பதினெட்டாம் நூற்றாண்டு), ஒரு நீதி நூல். ஔவையாரின்ஆத்திசூடி நீதிவாக்கியங்களைக் கதைகள் வாயிலாக விளக்கும் நூல்
  • ஆத்திசூடித் திறவுகோல்: ஆத்திசூடித் திறவுகோல் (1950), ஆத்திசூடியின் உயிர்வருக்க எழுத்துக்களுக்குப் பாடல் விளக்கமாக அமைந்த நூல்
  • ஆத்திசூடிப் புராணம்: ஆத்திசூடிப் புராணம் (ஆத்திசூடிப் புராணம் என்னும் கோபர்வத மாலை) (முதல் பதிப்பு: 1917) ஔவையாரின் ஆத்திசூடி நூலின் புராண விளக்கமாக இயற்றப்பட்ட நூல்
  • இளையார் ஆத்திசூடி: இளையார் ஆத்திசூடி (1967), ஓர் அறநூல். பாரதியாரின் ஆத்திசூடியைப் பின்பற்றி பாரதிதாசன் இருவகை ஆத்திசூடிகளை இயற்றினார்
  • சிவதோத்திர ஆத்திசூடி: சிவதோத்திர ஆத்திசூடி, ஔவையாரின் ஆத்திசூடியை முன்னோடியாகக் கொண்டு இயற்றப்பட்ட நூல். இந்நூல் எப்போது, யாரால் இயற்றப்பட்டது என அறிய இயலவில்லை
  • திருவள்ளுவர் ஆத்திசூடி: திருவள்ளுவர் ஆத்திசூடி (முதல் பதிப்பு: 1990), நீதி நூல்களுள் ஒன்று. திருக்குறளில் கூறப்பட்டிருக்கும் நீதிக் கருத்துகளைத் தொகுத்து ஆத்திசூடி நூலாகப் பதிப்பிக்கப்பட்டது
  • பாரதிதாசன் ஆத்திசூடி: பாரதிதாசன் ஆத்திசூடி (1947), ஒரு நீதி நூல். பாரதியாரின் ஆத்திசூடியைப் பின்பற்றி பாரதிதாசன் இருவகை ஆத்திசூடிகளை இயற்றினார்
  • விளையாட்டு ஆத்திசூடி: விளையாட்டு ஆத்திசூடி (முதல் பதிப்பு: 1988), ஔவையாரின் ஆத்திசூடியை அடிப்படையாகக் கொண்டு, விளையாட்டை மையமாக வைத்து எழுதப்பட்ட ஆத்திசூடி நூல்
  • புதிய ஆத்திசூடி: புதிய ஆத்திசூடி ஒரு நீதி நூல். ஔவையார் எழுதிய நீதி நூலான ஆத்திசூடியைப் போன்று, நற்கருத்துக்களை மக்களுக்குப் போதிக்க விரும்பி சுப்பிரமணிய பாரதியாரால் இயற்றப்பட்டது
  • புதிய ஆத்திசூடி (வாணிதாசன்): புதிய ஆத்திசூடி (1963) வாணிதாசன் எழுதிய நூல். ஔவையார் (கவிஞர்கள்) இயற்றிய ஆத்திசூடியைத் தொடர்ந்து பாரதியார், சுத்தானந்த பாரதி, பாரதிதாசன் எனப் பலரும் பல ஆத்திசூடி நூல்களை இயற்றினர்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.