கு.சா. கிருஷ்ணமூர்த்தி
From Tamil Wiki
கு.சா. கிருஷ்ணமூர்த்தி (கும்பகோணம் சாமிநாதன் கிருஷ்ணமூர்த்தி; கு.சா.கி.) (மே 19, 1914-மே 13, 1990) எழுத்தாளர், நடிகர், கவிஞர், திரைப்பாடலாசிரியர், நாடக ஆசிரியர், திரைக்கதை வசன ஆசிரியர், பேச்சாளர். இயல், இசை, நாடகம் என முத்தமிழிலும் இயங்கினார். பல கவிஞர்களை, நடிகர்களை தமிழ்த்திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார். தமிழக அரசின் கலைமாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றவர்.
பிறப்பு, கல்வி
கு.சா. கிருஷ்ணமூர்த்தி, மே 19, 1914 அன்று, கும்பகோணத்தில் சாமிநாதன் - மீனாட்சியம்மாள் இணையருக்குப் பிறந்தார். குடும்பச் சூழலால் மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி கற்றார்.