under review

கணவாளன் கூட்டம்

From Tamil Wiki
Revision as of 18:03, 5 July 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (<nowiki/> tag removed)

கணவாளன் கூட்டம் : கணவாளன் குலம். கொங்கு வேளாளக் கவுண்டர்களின் உட்குழுக்களில் ஒன்று. குலக்குழு என்று கூறலாம். கணம் என்றால் கூட்டம். அதிலிருந்து வந்த பெயர் எனப்படுகிறது. இவர்கள் கண்ணபுரத்தை முதலூர் ஆகக் கொண்டவர்கள். அதிலிருந்தும் இப்பெயர் வந்திருக்கலாம்

பார்க்க கொங்குவேளாளர் கூட்டங்கள்

வரலாறு

கண்ணபுரத்தை முதன்மைக் காணியாகக் கொண்டவரள் கணவாளன் குலத்தினர். திருச்செங்கோட்டில் பரசேகரி, இராசசேகரிவர்மன் கல்வெட்டுகள் கோயில் பணிகளை ஒன்றுபட்டுச் செய்யும் பணியாளர்களை கணப்பெருமக்கள் என்று சொல்கிறது.

கணவாளன் குலத்து நல்லயக் கவுண்டன் தீரத்தை கொங்குமண்டலச் சதகம் குறிப்பிடுகிறது

குன்றத்தூர் கோயில் பணிகளையெல்லாம் கணவாளர்கள் செய்தனர் என அக்கோவில் கல்வெட்டு கூறுகிறது.

உசாத்துணை


✅Finalised Page