under review

இசைத்தமிழ் செய்யுட்டுறைக் கோவை

From Tamil Wiki
Revision as of 17:57, 10 July 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected errors in article)

இசைத்தமிழ் செய்யுட்டுறைக் கோவை என்பது இசைத்தமிழ் இலக்கணம் குறித்து எழுதப்பட்ட ஒரு நூல். பதினோராம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தை சேர்ந்தது.

இந்நூல் இன்று கிடைக்கவில்லை, இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

நூல் அமைப்பு

இசைத்தமிழ் செய்யுட்டுறைக் கோவை என்ற நூல் இருந்தது பற்றிய குறிப்பை, பதினோராம் நூற்றாண்டில் குணசேகரர் என்பவர் யாப்பருங்கலக் காரிகைக்கு எழுதிய உரைப்பாயிரத்தில் இருந்து அறிய முடிகிறது.

“அற்றேல் இந்நூல் என்ன பெயர்த்தோ எனின், இசைத்தமிழ்ச் செய்யுட்டுறைக் கோவையே போலவும், அருமறையகத்து அட்டக ஓத்தின் வருக்கக்கோவையே போலவும் உரூபாவதாரத்திற்கு நீதகச் சுலோகமே போலவும் முதல் நினைப்பு உணர்த்திய இலக்கியத்தாய்ச் செய்யப்பட்டமையான் யாப்பருங்கலக் காரிகை என்னும் பெயர்த்து” - குணசேகரரின் உரைப்பாயிரம்.

இந்த வரிகளில் இருந்து யாப்பருங்கலம் என்னும் நூலுக்குப் புறனடையாக[1] யாப்பருங்கலக் காரிகை எழுதப்பட்டது போல, இசைத்தமிழ் நூல் என்னும் ஒரு முதல் நூலுக்குப் புறனடையாக இசைத்தமிழ்ச் செய்யுட்டுறைக் கோவை என்னும் இந்நூல் எழுதப்பட்டது என்பது தெரிகிறது. இந்தப் புறனடை நூலில் முதல் நூலில் இருந்த பாட்டுகளை உணர்த்தும் செய்யுள்களும் இருந்தன என்பதும் குறிப்பிடப்படுகிறது.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

  1. புறனடை = ஏற்கெனவே கூறிய விதிகளுள் அடங்காதவற்றைத் தனியே ஒரு நூற்பாவில் அமைத்துக் காட்டுவது



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 12-Dec-2022, 12:22:28 IST