under review

வேதநாயகம் பிள்ளை

From Tamil Wiki
Revision as of 16:00, 22 November 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors;)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
வேதநாயகம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: வேதநாயகம் (பெயர் பட்டியல்)

வேதநாயகம் பிள்ளை (பிறப்பு: 1865) ஈழத்து தமிழ்ப் புலவர், உரைநடை ஆசிரியர்.

வாழ்க்கைக் குறிப்பு

வேதநாயகம் பிள்ளை இலங்கை யாழ்ப்பாணம் பருத்தித் துறை கற்கோவளத்தில் 1865-ல் பிறந்தார். 1885-ல் மட்டக்களப்பு அரசடி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

ஆன்மிகம்

வேதநாயகம் பிள்ளை ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்று கிறிஸ்தவ மத போதகரானர். இறுதிக் காலம் வரை சமயப் பணி செய்தார்.

இதழியல்

வேதநாயகம் பிள்ளை 'தீபம்' என்ற பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். அதிலிருந்து விலகி 'இலங்கை வர்த்தமானி' என்ற வார இதழுக்கும் ஆசிரியராகப் பணியாற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

வேதநாயகம் பிள்ளை மட்டக்களப்பில் உரைநடை எழுவதற்கும், கல்வி பரவுவதற்கும் முன்னோடியாக இருந்தார். சிற்றிலக்கியங்கள் இயற்றினார்.

நூல் பட்டியல்

  • உழவர் சிறப்பு
  • மலேரியாக் கும்மி

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-Sep-2023, 10:24:58 IST