under review

கு.சா. கிருஷ்ணமூர்த்தி: Difference between revisions

From Tamil Wiki
(Page created; Para Added, Image Added)
 
(Added links to Disambiguation page)
 
(13 intermediate revisions by 4 users not shown)
Line 1: Line 1:
[[File:Ku.sa.krishnamurthy.jpg|thumb|கு.சா. கிருஷ்ணமூர்த்தி]]
{{OtherUses-ta|கிருஷ்ணமூர்த்தி|[[கிருஷ்ணமூர்த்தி (பெயர் பட்டியல்)]]}}
கு.சா. கிருஷ்ணமூர்த்தி (கும்பகோணம் சாமிநாதன் கிருஷ்ணமூர்த்தி; கு.சா.கி.) (மே 19, 1914-மே 13, 1990) எழுத்தாளர், நடிகர், கவிஞர், திரைப்பாடலாசிரியர், நாடக ஆசிரியர், திரைக்கதை வசன ஆசிரியர், பேச்சாளர். இயல், இசை, நாடகம் என முத்தமிழிலும் இயங்கினார். பல கவிஞர்களை, நடிகர்களை தமிழ்த்திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார். தமிழக அரசின் கலைமாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றவர்.
[[File:Ku.sa.krishnamurthy.jpg|thumb|கு.சா. கிருஷ்ணமூர்த்தி (இளம் வயதுப் படம்)]]
 
[[File:Ku.Sa.Ki old.jpg|thumb|கு.சா. கிருஷ்ணமூர்த்தி (முதிய வயதில்)]]
கு.சா. கிருஷ்ணமூர்த்தி (கும்பகோணம் சாமிநாதன் கிருஷ்ணமூர்த்தி; கு.சா.கி.) (மே 19, 1914-மே 13, 1990) எழுத்தாளர், நடிகர், கவிஞர், திரைப்பாடலாசிரியர், நாடக ஆசிரியர், திரைக்கதை வசன ஆசிரியர், பேச்சாளர். பல கவிஞர்களை, நடிகர்களை தமிழ்த்திரையுலகிற்கு அறிமுகம் செய்தார். தமிழக அரசின் கலைமாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றவர்.
== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
கு.சா. கிருஷ்ணமூர்த்தி, மே 19, 1914 அன்று, கும்பகோணத்தில் சாமிநாதன் - மீனாட்சியம்மாள் இணையருக்குப் பிறந்தார். குடும்பச் சூழலால் மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி கற்றார்.
கு.சா. கிருஷ்ணமூர்த்தி, மே 19, 1914 அன்று, கும்பகோணத்தில் சாமிநாதன் - மீனாட்சியம்மாள் இணையருக்குப் பிறந்தார். குடும்பச் சூழலால் மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி கற்றார்.
== தனி வாழ்க்கை ==
கு.சா. கிருஷ்ணமூர்த்தி, சில ஆண்டுகள் புதுக்கோட்டையில் ''தமிழகம்'' என்னும் ஒரு பதிப்பகத்தையும் படக் கடையும் தொடங்கி நடத்தினார். மணமானவர். (இரு மனைவிகள்)
[[File:Andhaman kaithi.jpg|thumb|அந்தமான் கைதி - நாடக நூல்]]
[[File:Books ku.sa.ki.jpg|thumb|கு.சா. கிருஷ்ணமூர்த்தி நூல்கள்]]
== நாடகம் ==
கு.சா. கிருஷ்ணமூர்த்தி, தனது இளம் வயதிலேயே [[எம். கந்தசாமி முதலியார்]] தலைமைப் பொறுப்பில் இருந்த நாடகக் குழுவில் சேர்ந்து ''பால பார்ட்'' வேடங்களில் நடித்தார். நடிப்பு, பாடல்கள் எழுதுவது, வசனம் எழுதுவது, நாடக, திரைக்கதை ஆக்கம், இசை என நாடகக் கலையின் அனைத்துக் கூறுகளையும் திறம்படக் கற்றுக் கொண்டார். வாலிபர் ஆனதும் முக்கிய வேடங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தன. சக நாடகக் குழுவினருடன் இணைந்து மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, பர்மா முதலிய நாடுகளுக்குச் சென்று நடித்தார்.
சில ஆண்டுகளுக்குப் பின் குடும்பச் சூழல்களால் நாடகங்களில் நடிப்பதைவிட்டு விலகி இருந்தார். அக்காலத்தில் இவர் [[அந்தமான் கைதி|''அந்தமான் கைதி'']] என்ற நாடகத்தை எழுதினார். அதனை [[டி.கே.எஸ் சகோதரர்கள்|டி.கே.எஸ். சகோதரர்கள்]] தமிழ்நாடு முழுவதும் மேடையேற்றினர். அந்நாடகம் கு.சா. கிருஷ்ணமூர்த்திக்கு மிகுந்த புகழைத் தேடிக் கொடுத்தது.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் [[தமிழ் நாடக வரலாறு]] என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். பின்னர் அது நூலாக வெளியானது. அந்நூலில் நாடகக் கலையின் தோற்றம், அது படிப்படியாக அடைந்த மாற்றம் என்பதில் தொடங்கி புராண, வரலாற்றுக் கால நாடகங்கள், சமூக சீர்த்திருத்த காலங்கள் வரையிலான நாடகங்கள், அதன் தன்மைகள், உத்திகள், தெலுங்கு, மலையாள, கன்னட உலகில் நிகழ்ந்த நாடக வளர்ச்சி, அதற்கு உழைத்த நடிகர்கள்  பற்றிய செய்திகளை  ஆவணப்படுத்தியுள்ளார்.
== திரைப்படம் ==
கு.சா. கிருஷ்ணமூர்த்தியின் நாடகமான ''அந்தமான் கைதி''  திரைப்படமானது. அதற்குக் கதை-வசனம், பாடல்களை கிருஷ்ணமூர்த்தி எழுதினார் [[எம்.ஜி. ராமச்சந்திரன்]] அதில் நாயகனாக நடித்தார். அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜூபிடர் நிறுவனத்தின் படங்களுக்கு பாடல்கள், வசனங்கள் எழுதினார். ஜுபிடர் நிறுவனத்தார் [[ஜெ.ஆர். ரங்கராஜு|ஜே.ஆர்.ரங்கராஜு]]வின் ''சந்திரகாந்தா'' கதையை படமாக எடுக்க ஏற்பாடு செய்தபோது, அதில் சுண்டூர் இளவரசன் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் [[பி.யு. சின்னப்பா]] நடிக்க கு.சா.கிருஷ்ணமூர்த்தி பரிந்துரைத்தார். எம்.ஜி.ஆர். நடித்த ''குமாரி'' படத்திற்குப் பாடல்கள் எழுதினார்.
டைரக்டர் கே.சுப்பிரமணியத்தின் மருமகன், ''ஒன்றே குலம்'' என்ற படத்தைத் தயாரித்போது கு.சா. கிருஷ்ணமூர்த்தி, அதற்குக் கதை வசனம் எழுதினார். அப்படத்தில் கு.சா.கி.யால் செவிலிப் பெண் வேடத்தில் அறிமுகப்படுத்தப்பட்டவர்தான் பிற்காலத்தில் இந்தியாவின் புகழ் பெற்ற நடிகையாக உயர்ந்த வஹீதா ரஹ்மான். உவமைக்கவிஞர் [[சுரதா]], [[கு.மா. பாலசுப்பிரமணியம்]], ஏவி.எம்.ராஜன், அவிநாசிமணி ஆகியோரைத் தமிழ்த்திரையுலகில் அறிமுகம் செய்து வைத்தார்.
கு.சா. கிருஷ்ணமூர்த்தி, ''ஆண்டாள், போஜன் ,அம்பிகாபதி, அருமை மகள் அபிராமி, குமாரி, அவன் அமரன், சக்கரவர்த்தித் திருமகள், எங்கள் குடும்பம் பெரிசு, பதியே தெய்வம்,  ராஜராஜன், ரத்தக் கண்ணீர்,  தங்க ரத்தினம், திருடாதே'' எனப் பல படங்களுக்குப் பாடல்கள் எழுதினார்.
== இலக்கியம் ==
கு.சா. கிருஷ்ணமூர்த்தி, ‘[[உமா (இதழ்)|உமா]]’, ‘இந்திரா’, ‘சண்டமாருதம்’, ‘கலைவாணி’, ‘[[நவமணி (இதழ்)|நவமணி]]’, ‘[[செங்கோல்]]’, ‘[[தமிழ்நாடு (இதழ்)|தமிழ்நாடு]]’ போன்ற பல இதழ்களில் கவிதைகள் எழுதினார். தமிழிசைப் பாடல்கள் பலவற்றை இயற்றினார். இவரது பாடல்களை [[எம்.எம். தண்டபாணி தேசிகர்]], [[கே.பி. சுந்தராம்பாள்]], [[மதுரை சோமசுந்தரம்]], சி.எஸ்.ஜெயராமன், [[சீர்காழி கோவிந்தராஜன்]] உள்ளிட்ட பலர் பாடினர்.
[[இராமலிங்க வள்ளலார்|வள்ளலாரின்]] 101 பாடல்களை இராக - தாள - சுரக் குறிப்புடன் ''அருட்பா இசையமுதம்'' என்னும் பெயரிலும் 100 பாடல்களை இராக - தாள - சுரக் குறிப்புடன் ''அமுதத் தமிழிசை'' என்னும் பெயரிலும் குருவாயூர் பொன்னம்மாளுடன் இணைந்து வெளியிட்டார்.
[[File:Ku.sa.ki with ma.po.si.jpg|thumb|ம.பொ. சிவஞானம் அவர்களுடன் கு.சா. கிருஷ்ணமூர்த்தி]]
== அரசியல் ==
1943-ல், புதுக்கோட்டை நகர காங்கிரஸ் செயலாளராக இருந்தார். தனி சமஸ்தானமாக இருந்த புதுக்கோட்டையை இந்திய அரசுடன் இணைக்க மக்கள் நடத்தியப் போராட்டத்தில் முக்கியப் பங்குவகித்தார். பின் [[ம.பொ. சிவஞானம்|ம.பொ.சி]].யின் [[தமிழரசுக் கழகம்|தமிழரசுக் கழக]]த்தில் இணைந்து செயல்பட்டார். அக்கழகத்தின் செயற்குழு உறுப்பினராக இருந்தார். தமிழகத்துடன் திருத்தணி, நாகர்கோவில், கன்னியாகுமரி பகுதிகள் இணைக்கப்பட வேண்டும் என்று நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைசென்றார்.
[[File:Ku.sa.ki. with kalaignar& ma.po.sivagnanam.jpg|thumb|கலைஞர் மு. கருணாநிதி, ம.பொ.சிவஞானத்துடன் கு.சா. கிருஷ்ணமூர்த்தி]]
== விருதுகள் ==
* தமிழ் வளர்ச்சிக் கழகம் வழங்கிய சிறந்த நாடக நூலுக்கான பரிசு - ''அந்தமான் கைதி''
* [[தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறை|தமிழ் வளர்ச்சித் துறை]]யின் தமிழ் வளர்ச்சிக்கான 1978-ம் ஆண்டின் சிறந்த நூல்களுக்கான இரண்டாம் பரிசு - ''பருவ மழை''
* தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் வழங்கிய சிறந்த நாடக ஆசிரியருக்கான விருது
* தமிழக அரசின் கலைமாமணி விருது
== மறைவு ==
கு.சா. கிருஷ்ணமூர்த்தி, மே 13, 1990 அன்று தனது 76-ம் வயதில் காலமானார்.
== நாட்டுடைமை ==
கு.சா. கிருஷ்ணமூர்த்தியின் நூல்கள் தமிழக அரசால் [[நூல்கள் நாட்டுடைமை|நாட்டுடைமை]] ஆக்கப்பட்டுள்ளன.
[[File:Ku.sa. krishnamurthy song book.jpg|thumb|கு.சா.  கிருஷ்ணமூர்த்தி திரையிசைப் பாடல்கள் (படம் நன்றி : மணிவாசகர் பதிப்பகம்)]]
[[File:Ku.sa.ki katturaigal.jpg|thumb|கு,.சா. கிருஷ்ணமூர்த்தி நினைவுக் கட்டுரைகள் (படம் நன்றி: சாகித்ய அகாடமி)]]
== ஆவணம் ==
கு.சா. கிருஷ்ணமூர்த்தியின் நூல்கள் சில தமிழ் இணைய மின்னூலகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளன. இவரது திரையிசைப் பாடல்களை கவிஞர் பொன். செல்லமுத்து, கவிஞர் ''கு.சா.கிருஷ்ணமூர்த்தி திரையிசைப் பாடல்கள்'' என்ற தலைப்பில் தொகுத்துள்ளார். [[மணிவாசகர் பதிப்பகம்]] இந்நூலை வெளியிட்டுள்ளது.


== தனி வாழ்க்கை ==
''கு.சா. கிருஷ்ணமூர்த்தி நூற்றாண்டு விழா உரையரங்கக் கட்டுரைகள்'' என்ற தலைப்பிலான நூலை [[கிருங்கை சேதுபதி]], [[சாகித்ய அகாதெமி|சாகித்ய அகாதெமி]]க்காகத் தொகுத்துள்ளார்.
== இலக்கிய இடம் ==
கு.சா. கிருஷ்ணமூர்த்தி இயல், இசை, நாடகம் என முத்தமிழிலும் இயங்கினார். திரைப்பாடல்களில் மெட்டுக்குப் பாடல் எழுதுவதில் வல்லவராக இருந்தார். புராண நாடகங்கள் அதிகம் வெளிவந்துகொண்டிருந்த காலத்தில், நாடகத்தின் போக்கை சமூக நாடகங்கள் பக்கம் மடை மாற்றினார். தமிழிசைப் பாடல்கள் பலவற்றை எழுதி [[தமிழிசை இயக்கம்|தமிழிசை இயக்க]] வளர்ச்சிக்குப் பங்களித்தார். [[உடுமலை நாராயணகவி]], [[தஞ்சை ராமையாதாஸ்]], [[கம்பதாசன்]] வரிசையில் இடம் பெறுபவர், கு.சா. கிருஷ்ணமூர்த்தி.
== கு.சா. கிருஷ்ணமூர்த்தியின் திரையிசைப் பாடல்கள் ==
* [https://www.youtube.com/watch?v=ft939kGJR8k&ab_channel=Muthamizh காதல் கனிரசமே...]
* [https://www.youtube.com/watch?v=UuJzb0NW1bU&ab_channel=MangoMusicTamil குற்றம் புரிந்தவன்...]
* [https://www.youtube.com/watch?v=FhCEmP65WWE&ab_channel=VembarManivannan நிலவோடு வான் முகில் விளையாடுதே...]
* [https://www.youtube.com/watch?v=2FmuSFuY7EQ&ab_channel=SakiyaAshok எளியோரைத் தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்...]
* [https://www.youtube.com/watch?v=DXb-SDkckSU&ab_channel=Tamilcinema சொல்லாலே விளக்கத் தெரியலே...]
* [https://www.youtube.com/watch?v=E0zYEnfEaGE&ab_channel=APInternational அகில பாரத பெண்கள் திலகமாய்...]
== கு.சா. கிருஷ்ணமூர்த்தியின் தமிழிசைப் பாடல்கள் ==
* [https://www.youtube.com/watch?v=0ZEXbNBCzVU&ab_channel=SangeethaRasika கருணை முகம் காட்டும் காந்திமதித் தாயே... எம்.எல். வசந்தகுமாரி]
* [https://www.youtube.com/watch?v=8WZDSEmzFeE&ab_channel=SubramanianKrishnan வரவேணும் வடிவேலனே... எஸ். ராஜம்]
* [https://www.youtube.com/watch?v=OaAXUhNAQrE&ab_channel=SubramanianKrishnan வரவேணும் வடிவேலனே... ஓ.எஸ். தியாகராஜன்]
* [https://www.youtube.com/watch?v=5B9zNoHid5U&ab_channel=savita208 அடைக்கலம் புகுந்தேன்]
[[File:Ku.Sa.Ki Book Release - Dinamani.jpg|thumb|கு.சா. கிருஷ்ணமூர்த்தி நூல் வெளியீடு]]
== நூல்கள் ==
===== கவிதை =====
* பருவ மழை
===== நாடகம் =====
* அந்தமான் கைதி
* கலைவாணன்
* என் காணிக்கை
===== தமிழிசை =====
* அமுதத் தமிழிசை
* அருட்பா இசையமுதம்
* இசை இன்பம்
* தமிழிசை முழக்கம்
===== கட்டுரை =====
* தமிழ் நாடக வரலாறு
== உசாத்துணை ==
* [http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=9556 கு.சா. கிருஷ்ணமூர்த்தி தென்றல் இதழ் கட்டுரை]
* [http://siragu.com/%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0/ கு.சா.கிருஷ்ணமூர்த்தி: முனைவர் மு.பழனியப்பன்]
* [https://www.tamildigitallibrary.in/book-list-view-author?act=%E0%AE%95&id=jZY9lup2kZl6TuXGlZQdjZpel0ly&tag=%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%2C+%E0%AE%95%E0%AF%81.%E0%AE%9A%E0%AE%BE. கு.சா. கிருஷ்ணமூர்த்தி நாட்டுடைமை நூல்கள்: தமிழ் இணையக் கல்விக்கழகம்]
* [http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=7614&id1=9&issue=20140915 குங்குமம் இதழ் கட்டுரை]
* [https://www.saregama.com/artist/kusa-krishnamurthy_31863/songs கு.சா. கிருஷ்ணமூர்த்தி பாடல்கள்]
 
 
{{Finalised}}
 
{{Fndt|28-Feb-2023, 06:28:02 IST}}




[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 18:49, 25 September 2024

XYZ என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: XYZ
கு.சா. கிருஷ்ணமூர்த்தி (இளம் வயதுப் படம்)
கு.சா. கிருஷ்ணமூர்த்தி (முதிய வயதில்)

கு.சா. கிருஷ்ணமூர்த்தி (கும்பகோணம் சாமிநாதன் கிருஷ்ணமூர்த்தி; கு.சா.கி.) (மே 19, 1914-மே 13, 1990) எழுத்தாளர், நடிகர், கவிஞர், திரைப்பாடலாசிரியர், நாடக ஆசிரியர், திரைக்கதை வசன ஆசிரியர், பேச்சாளர். பல கவிஞர்களை, நடிகர்களை தமிழ்த்திரையுலகிற்கு அறிமுகம் செய்தார். தமிழக அரசின் கலைமாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றவர்.

பிறப்பு, கல்வி

கு.சா. கிருஷ்ணமூர்த்தி, மே 19, 1914 அன்று, கும்பகோணத்தில் சாமிநாதன் - மீனாட்சியம்மாள் இணையருக்குப் பிறந்தார். குடும்பச் சூழலால் மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி கற்றார்.

தனி வாழ்க்கை

கு.சா. கிருஷ்ணமூர்த்தி, சில ஆண்டுகள் புதுக்கோட்டையில் தமிழகம் என்னும் ஒரு பதிப்பகத்தையும் படக் கடையும் தொடங்கி நடத்தினார். மணமானவர். (இரு மனைவிகள்)

அந்தமான் கைதி - நாடக நூல்
கு.சா. கிருஷ்ணமூர்த்தி நூல்கள்

நாடகம்

கு.சா. கிருஷ்ணமூர்த்தி, தனது இளம் வயதிலேயே எம். கந்தசாமி முதலியார் தலைமைப் பொறுப்பில் இருந்த நாடகக் குழுவில் சேர்ந்து பால பார்ட் வேடங்களில் நடித்தார். நடிப்பு, பாடல்கள் எழுதுவது, வசனம் எழுதுவது, நாடக, திரைக்கதை ஆக்கம், இசை என நாடகக் கலையின் அனைத்துக் கூறுகளையும் திறம்படக் கற்றுக் கொண்டார். வாலிபர் ஆனதும் முக்கிய வேடங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தன. சக நாடகக் குழுவினருடன் இணைந்து மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, பர்மா முதலிய நாடுகளுக்குச் சென்று நடித்தார்.

சில ஆண்டுகளுக்குப் பின் குடும்பச் சூழல்களால் நாடகங்களில் நடிப்பதைவிட்டு விலகி இருந்தார். அக்காலத்தில் இவர் அந்தமான் கைதி என்ற நாடகத்தை எழுதினார். அதனை டி.கே.எஸ். சகோதரர்கள் தமிழ்நாடு முழுவதும் மேடையேற்றினர். அந்நாடகம் கு.சா. கிருஷ்ணமூர்த்திக்கு மிகுந்த புகழைத் தேடிக் கொடுத்தது.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் நாடக வரலாறு என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். பின்னர் அது நூலாக வெளியானது. அந்நூலில் நாடகக் கலையின் தோற்றம், அது படிப்படியாக அடைந்த மாற்றம் என்பதில் தொடங்கி புராண, வரலாற்றுக் கால நாடகங்கள், சமூக சீர்த்திருத்த காலங்கள் வரையிலான நாடகங்கள், அதன் தன்மைகள், உத்திகள், தெலுங்கு, மலையாள, கன்னட உலகில் நிகழ்ந்த நாடக வளர்ச்சி, அதற்கு உழைத்த நடிகர்கள் பற்றிய செய்திகளை ஆவணப்படுத்தியுள்ளார்.

திரைப்படம்

கு.சா. கிருஷ்ணமூர்த்தியின் நாடகமான அந்தமான் கைதி திரைப்படமானது. அதற்குக் கதை-வசனம், பாடல்களை கிருஷ்ணமூர்த்தி எழுதினார் எம்.ஜி. ராமச்சந்திரன் அதில் நாயகனாக நடித்தார். அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜூபிடர் நிறுவனத்தின் படங்களுக்கு பாடல்கள், வசனங்கள் எழுதினார். ஜுபிடர் நிறுவனத்தார் ஜே.ஆர்.ரங்கராஜுவின் சந்திரகாந்தா கதையை படமாக எடுக்க ஏற்பாடு செய்தபோது, அதில் சுண்டூர் இளவரசன் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் பி.யு. சின்னப்பா நடிக்க கு.சா.கிருஷ்ணமூர்த்தி பரிந்துரைத்தார். எம்.ஜி.ஆர். நடித்த குமாரி படத்திற்குப் பாடல்கள் எழுதினார்.

டைரக்டர் கே.சுப்பிரமணியத்தின் மருமகன், ஒன்றே குலம் என்ற படத்தைத் தயாரித்போது கு.சா. கிருஷ்ணமூர்த்தி, அதற்குக் கதை வசனம் எழுதினார். அப்படத்தில் கு.சா.கி.யால் செவிலிப் பெண் வேடத்தில் அறிமுகப்படுத்தப்பட்டவர்தான் பிற்காலத்தில் இந்தியாவின் புகழ் பெற்ற நடிகையாக உயர்ந்த வஹீதா ரஹ்மான். உவமைக்கவிஞர் சுரதா, கு.மா. பாலசுப்பிரமணியம், ஏவி.எம்.ராஜன், அவிநாசிமணி ஆகியோரைத் தமிழ்த்திரையுலகில் அறிமுகம் செய்து வைத்தார்.

கு.சா. கிருஷ்ணமூர்த்தி, ஆண்டாள், போஜன் ,அம்பிகாபதி, அருமை மகள் அபிராமி, குமாரி, அவன் அமரன், சக்கரவர்த்தித் திருமகள், எங்கள் குடும்பம் பெரிசு, பதியே தெய்வம், ராஜராஜன், ரத்தக் கண்ணீர், தங்க ரத்தினம், திருடாதே எனப் பல படங்களுக்குப் பாடல்கள் எழுதினார்.

இலக்கியம்

கு.சா. கிருஷ்ணமூர்த்தி, ‘உமா’, ‘இந்திரா’, ‘சண்டமாருதம்’, ‘கலைவாணி’, ‘நவமணி’, ‘செங்கோல்’, ‘தமிழ்நாடு’ போன்ற பல இதழ்களில் கவிதைகள் எழுதினார். தமிழிசைப் பாடல்கள் பலவற்றை இயற்றினார். இவரது பாடல்களை எம்.எம். தண்டபாணி தேசிகர், கே.பி. சுந்தராம்பாள், மதுரை சோமசுந்தரம், சி.எஸ்.ஜெயராமன், சீர்காழி கோவிந்தராஜன் உள்ளிட்ட பலர் பாடினர். வள்ளலாரின் 101 பாடல்களை இராக - தாள - சுரக் குறிப்புடன் அருட்பா இசையமுதம் என்னும் பெயரிலும் 100 பாடல்களை இராக - தாள - சுரக் குறிப்புடன் அமுதத் தமிழிசை என்னும் பெயரிலும் குருவாயூர் பொன்னம்மாளுடன் இணைந்து வெளியிட்டார்.

ம.பொ. சிவஞானம் அவர்களுடன் கு.சா. கிருஷ்ணமூர்த்தி

அரசியல்

1943-ல், புதுக்கோட்டை நகர காங்கிரஸ் செயலாளராக இருந்தார். தனி சமஸ்தானமாக இருந்த புதுக்கோட்டையை இந்திய அரசுடன் இணைக்க மக்கள் நடத்தியப் போராட்டத்தில் முக்கியப் பங்குவகித்தார். பின் ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகத்தில் இணைந்து செயல்பட்டார். அக்கழகத்தின் செயற்குழு உறுப்பினராக இருந்தார். தமிழகத்துடன் திருத்தணி, நாகர்கோவில், கன்னியாகுமரி பகுதிகள் இணைக்கப்பட வேண்டும் என்று நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைசென்றார்.

கலைஞர் மு. கருணாநிதி, ம.பொ.சிவஞானத்துடன் கு.சா. கிருஷ்ணமூர்த்தி

விருதுகள்

  • தமிழ் வளர்ச்சிக் கழகம் வழங்கிய சிறந்த நாடக நூலுக்கான பரிசு - அந்தமான் கைதி
  • தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான 1978-ம் ஆண்டின் சிறந்த நூல்களுக்கான இரண்டாம் பரிசு - பருவ மழை
  • தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் வழங்கிய சிறந்த நாடக ஆசிரியருக்கான விருது
  • தமிழக அரசின் கலைமாமணி விருது

மறைவு

கு.சா. கிருஷ்ணமூர்த்தி, மே 13, 1990 அன்று தனது 76-ம் வயதில் காலமானார்.

நாட்டுடைமை

கு.சா. கிருஷ்ணமூர்த்தியின் நூல்கள் தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

கு.சா. கிருஷ்ணமூர்த்தி திரையிசைப் பாடல்கள் (படம் நன்றி : மணிவாசகர் பதிப்பகம்)
கு,.சா. கிருஷ்ணமூர்த்தி நினைவுக் கட்டுரைகள் (படம் நன்றி: சாகித்ய அகாடமி)

ஆவணம்

கு.சா. கிருஷ்ணமூர்த்தியின் நூல்கள் சில தமிழ் இணைய மின்னூலகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளன. இவரது திரையிசைப் பாடல்களை கவிஞர் பொன். செல்லமுத்து, கவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி திரையிசைப் பாடல்கள் என்ற தலைப்பில் தொகுத்துள்ளார். மணிவாசகர் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது.

கு.சா. கிருஷ்ணமூர்த்தி நூற்றாண்டு விழா உரையரங்கக் கட்டுரைகள் என்ற தலைப்பிலான நூலை கிருங்கை சேதுபதி, சாகித்ய அகாதெமிக்காகத் தொகுத்துள்ளார்.

இலக்கிய இடம்

கு.சா. கிருஷ்ணமூர்த்தி இயல், இசை, நாடகம் என முத்தமிழிலும் இயங்கினார். திரைப்பாடல்களில் மெட்டுக்குப் பாடல் எழுதுவதில் வல்லவராக இருந்தார். புராண நாடகங்கள் அதிகம் வெளிவந்துகொண்டிருந்த காலத்தில், நாடகத்தின் போக்கை சமூக நாடகங்கள் பக்கம் மடை மாற்றினார். தமிழிசைப் பாடல்கள் பலவற்றை எழுதி தமிழிசை இயக்க வளர்ச்சிக்குப் பங்களித்தார். உடுமலை நாராயணகவி, தஞ்சை ராமையாதாஸ், கம்பதாசன் வரிசையில் இடம் பெறுபவர், கு.சா. கிருஷ்ணமூர்த்தி.

கு.சா. கிருஷ்ணமூர்த்தியின் திரையிசைப் பாடல்கள்

கு.சா. கிருஷ்ணமூர்த்தியின் தமிழிசைப் பாடல்கள்

கு.சா. கிருஷ்ணமூர்த்தி நூல் வெளியீடு

நூல்கள்

கவிதை
  • பருவ மழை
நாடகம்
  • அந்தமான் கைதி
  • கலைவாணன்
  • என் காணிக்கை
தமிழிசை
  • அமுதத் தமிழிசை
  • அருட்பா இசையமுதம்
  • இசை இன்பம்
  • தமிழிசை முழக்கம்
கட்டுரை
  • தமிழ் நாடக வரலாறு

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 28-Feb-2023, 06:28:02 IST